தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு ஆலோசனை!!
தமிழகத்தில் ஜனவரி 4 முதல் பள்ளிகள் திறப்பு- கல்வித்துறை குழு ஆலோசனை!! கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இந்நிலையில் பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு ஆலோசனை நடத்தியுள்ளனர். பள்ளிகள் திறப்பு: கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு முதல்கட்டமாக தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள் திறக்கப்பட்டன. அதன் பின் அடுத்தகட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின.