ஒரே நேரத்தில் 2 டிகிரிகள் – UGC ஒப்புதல் !!!!




ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்த இரண்டு டிகிரிகளில் ஒன்றை வழக்கமான முறையில் படிக்க வேண்டும், மற்றொன்று ஆன்லைன் பயன்முறை மூலம் படிக்க வேண்டும் . இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் UGC அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் இக்காலத்தில் மாணவர்கள் பட்டபடிப்புடன் சேர்த்து திறன் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் படிப்புகளை படிக்க இது சிறந்த வாய்ப்பாக அமையும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இந்த முறைப்படி, படிக்கும் முறை கடந்த 2016ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி தற்போது இதற்கு அனுமதி வழங்கி உள்ளது என்பது குறிப்பிட தக்கதது. இதன் மூலம் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளில் இரண்டு பட்டபடிப்பிற்கான சான்றிதழ்கள் கிடைக்க வாய்ப்பு உருவாகிறது.

Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION