ஜூலை மாதம் 30 சதவிகித மாணவர்களுடன் உயர்/மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு : 1-8 மாணவர்களுக்கு தனி திட்டம்


இந்தியாவில் ஜூலை மாதம் முதல் 30 சதவிகித மாணவர்களுடன் மண்டல வாரியாக பள்ளிகள் திறக்கப்படும். துவக்க நிலையில் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே கல்வியைத் தொடருவார்கள்.

இந்தியாவில் மண்டல வாரியாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் உள்ள பள்ளிகள் முதலில் திறக்கப்படும். துவக்க நிலை வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டிய அவசியமில்லை. அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் கல்வியைத் தொடருவார்கள். தனிமனித இடைவெளியை பராமரிப்பதற்காக 30 சதவிகித மாணவர்களுடன் வகுப்புகள் நடத்தப்படும்.

மண்டல வாரியாக பள்ளிகளை மீண்டும் திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மீண்டும் திறக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள போதிலும், இது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். ஒன்று முதல் ஏழாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிகள் முழு வீச்சில் செயல்படும் வரை காத்திருக்க வேண்டியிருக்கும்.

கொரோனா பாதுகாப்பிற்காக விதிக்கப்பட்டிருக்கும் விதிகளை சிறு குழந்தைகள் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதால், அவர்கள் தற்போதைக்கு வீட்டில் இருந்தபடியே பாடங்களைத் தொடருவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும். இதனுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களும், இதற்கு ஒப்புதல் அளித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

மார்ச் 16 முதல், சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது அனைவரின் மனதிலும் உள்ள ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது.

அநேகமாக, ஜூலை மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தனிமனித இடைவெளி பராமரிக்கப்பட்டு, 30% மாணவர் வருகையுடன், பள்ளிகள் இரண்டு ஷிஃப்டுகளில் இயக்கப்படக்கூடும்.

கொரோனா கட்டுபாடு வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், மற்றவர்களை பின்பற்றச் செய்யவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளியில் எந்த வித கூட்டங்களும் நடைபெறாது என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன

Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION