தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த மார்ச் 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக பொறியியல் கல்லூரிகள், கலை -அறிவியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 2020- 21 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை. வகுப்புகள் தொடக்கம் ஆகிய எப்போது இருக்கும் என்ற கேள்வியும் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, உயர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, "தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முழுவதுமாக நிங்கிய பின்னரே கல்லுரிகள் திறக்கப்படும். மாணவர்களுக்கு பயம் இல்லை என்ற நிலை வந்த பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், "கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மையங்களாக செயல்பட்டுவரும் கல்லூரிகளில், கிருமிநாசினிகள் கொண்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்பே, அங்கு மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
Comments
Post a Comment