தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்
தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதனால் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் கூட மூடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆண்டுத்தேர்வும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளும் நடத்தப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான கலந்தாய்வும் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்நிலையில் தேசிய அளவிலான பாடத்திட்டங்கள் 22 பிரிவுகளில் மாற்றி அமைக்கப்படும் என NCERT அறிவித்து உள்ளது. இதனை அடுத்த கல்வியாண்டிற்குள் அமல் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அமைத்துத் தந்த இந்த புதிய பாடத்திட்டத்தினை அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
மாணவர்களின் புத்தக சுமையினை குறைத்தல், புதிய அம்சங்களை கையாளுதல் போன்ற முடிவுகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ உள்ளன.
Comments
Post a Comment