TNTET 2020 - ஜுலை மாதம் ஆசிரியர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியாகுமா?



பள்ளிகளில் பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரத்தை ஜூன் 6 - க்குள் அனுப்பு மாறு அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .

இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ( பணியாளர் பிரிவு ) எஸ்.நாகராஜமுருகன் , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை : அனைத்து அரசு , நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1.06.2020 நிலவரப்படி நிரப் பத் தகுந்த பட்டதாரி , இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை ஜூன் 6 - க்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும் .

இந்த விவரங்களை அனுப்பும் போது 1.08.2019 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறிந்து , இயக்குநரின் பொதுத் தொகுப்புக்கு ஒப்படைக் கப்பட்ட பணியிடங்களையும் , கூடு தல் தேவையுள்ள பள்ளிகளின் பெயர்களையும் காலிப்பணியிடங் களாக கருதக் கூடாது . இவ்வாறு சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளது .

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2020-2021 வருடாந்திர தேர்வுக் அட்டவணைப்படி , 730 இடைநிலை ஆசிரியர் காலியிடங் களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு பற்றிய அறிவிப்பு வரும் ஜூலை 9 - ம் தேதியும் , அதேபோல் , 572 பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களுக்கான அறிவிப்பு ஜூலை 17 - ம் தேதியும் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION