தேசிய கல்விக் கொள்கை --2020: பள்ளிக் கல்வி
நம் நாட்டில், கடைசியாக, 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி கொள்கையில், 1992-ம் ஆண்டில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. கடந்த, 2014 லோக்சபா தேர்தலின்போது, 'புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்படும்' என, பா.ஜ., தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி, பல விவாதங்கள், மக்களின் கருத்துக் கேட்பு, நிபுணர்களுடன் ஆய்வு என, பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு, தேசிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு, நாட்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக பல சர்ச்சைகள், விமர்சனங்கள் கூறப்பட்டாலும், பெரும்பாலானோர், புதியக் கல்விக் கொள்கையை வரவேற்றுள்ளனர். தாய்மொழி வழி கற்றல், மற்ற மொழிகளை கற்றல், எளிமையான தேர்வு முறைகள், குழந்தைகள் கற்றல் திறனை மதிப்பீடு செய்தல், போதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆசிரியர் பயிற்சி முறையில் மாற்றங்கள் போன்றவை, இந்த கல்விக் கொள்கையின் முக்கிய செயல் திட்டங்களாகும். விளையாட்டுடன் கூடிய கல்வி, கலைகள், கைவினைகளில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், தொழிற்கல்வி ஒருங்கிணைப்பு, என, இந்தக் கல்விக்