B.Ed., M.Ed., படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் தேர்விற்கு ஒப்புதல்!!

 தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக செமஸ்டர் தேர்வினை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வு:

தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் எதிரொலியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்களின் கல்வி நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற ஜூன் 24 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் துவங்கவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் அவர்கள் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தேர்வுகள் நடத்துவது குறித்து, உயர்கல்வித்துறை செயலகத்தில், பல்கலைகளின் துணைவேந்தர்கள் கடந்த வாரம் ஆலோசனை மேற்கொண்டனர்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி பி.எட், மற்றும் எம்.எட் உள்ளிட்ட படிப்புகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை சார்பில் ஆன்லைன் வழியாக செமஸ்டர் தேர்வுகளை நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் படி கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 2021, ஜூன் மாதம் 24 ஆம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெறும் என்றும் இதில் பங்கேற்க உள்ள நடப்பு கல்வியாண்டு மாணவர்கள் மற்றும் அரியர் மாணவர்கள், அவரவர் கல்லூரிகள் தெரிவிக்கும் வழிமுறைகளை பின்பற்றி தேர்வுக்கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

EDUCATION : RABINDRANATH TAGORE’S PHILOSOPHY OF EDUCATION