CBSE 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் குறியீடு (Coding) மற்றும் தரவு அறிவியல் புதிய பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடங்கள்:
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மைக்ரோசாப்ட் உடன் இணைந்து 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறியீட்டு முறையையும், 8-12 ஆம் வகுப்புக்கான தரவு அறிவியல் பாடத்திட்டத்தையும் 2021-22 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறியீட்டு மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டம் விமர்சன சிந்தனை, கணக்கீட்டு திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தல் போன்றவற்றை கொண்டுள்ளது.
தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் குறியீட்டு மற்றும் தரவு அறிவியல் இரண்டிலும் துணை புத்தகங்களை வடிவமைத்துள்ளது. இது என்.சி.இ.ஆர்.டி வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் முன்னேறும் போது இந்த டிஜிட்டல் உலகில் வெற்றிபெற மாணவர்களை தயார்படுத்துவது அவசியமாகும்.
தரவு அறிவியல், கணிதம், மொழிகள் மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மாணவர்களை சிறப்பாகக் கற்க உதவியாக இருக்கும். புதிய உலக வேலைக்கு இந்தியாவின் எதிர்கால பணியாளர்களை தயாரிப்பதில் பாடத்திட்டம் ஒரு வலுவான அஸ்திவாரமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் இந்தியாவின் பொதுத்துறை நிர்வாக இயக்குனர் நவ்தெஸ் பால் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment