தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான டி.என்.எஸ்.இ.டி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிக்கான TNSET தகுதித் தேர்விற்கு நாளை முதல் ஜூலை 7ஆம் தேதி வரை http://tnsetau.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை பட்டதில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டி.என்.எஸ்.இ.டி தேர்வு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும் தகுதி தேர்வாகும். மாநில அளவிலான இந்த தகுதித் தேர்வு (டி.என்.எஸ்.இ.டி) மொத்தம் 26 பாடங்களுக்கு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தமிழக மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் (தனியார் மற்றும...