Posts
Showing posts from June, 2021
TNSET: உதவிப் பேராசிரியர் தகுதித் தேர்வு: உடனே அப்ளை பண்ணுங்க...
- Get link
- X
- Other Apps
தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்கான டி.என்.எஸ்.இ.டி தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த அண்ணாமலை பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிக்கான TNSET தகுதித் தேர்விற்கு நாளை முதல் ஜூலை 7ஆம் தேதி வரை http://tnsetau.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலை பட்டதில் 55 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டி.என்.எஸ்.இ.டி தேர்வு அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் ஏற்பாடு செய்யப்படும் தகுதி தேர்வாகும். மாநில அளவிலான இந்த தகுதித் தேர்வு (டி.என்.எஸ்.இ.டி) மொத்தம் 26 பாடங்களுக்கு நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தமிழக மாநிலத்திற்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களில் (தனியார் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள்) பணிபுரியலாம்.
CBSE 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம்!
- Get link
- X
- Other Apps
நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டில் குறியீடு (Coding) மற்றும் தரவு அறிவியல் புதிய பாடங்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய பாடங்கள்: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மைக்ரோசாப்ட் உடன் இணைந்து 6-8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குறியீட்டு முறையையும், 8-12 ஆம் வகுப்புக்கான தரவு அறிவியல் பாடத்திட்டத்தையும் 2021-22 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறியீட்டு மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டம் விமர்சன சிந்தனை, கணக்கீட்டு திறன், சிக்கலைத் தீர்க்கும் திறன், படைப்பாற்றல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தல் போன்றவற்றை கொண்டுள்ளது. தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனம் குறியீட்டு மற்றும் தரவு அறிவியல் இரண்டிலும் துணை புத்தகங்களை வடிவமைத்துள்ளது. இது என்.சி.இ.ஆர்.டி வடிவங்கள் மற்றும் கட்டமைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பம் முன்னேறும் போது இந்த டிஜிட்டல் உலகில் வெற்றிபெற மாணவர்களை தயார்படுத்து
B.Ed., M.Ed., படிக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைன் தேர்விற்கு ஒப்புதல்!!
- Get link
- X
- Other Apps
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக அனைத்து இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக செமஸ்டர் தேர்வினை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு: தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் எதிரொலியாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் மாணவர்களின் கல்வி நலன் கருதி அவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகிற ஜூன் 24 ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் துவங்கவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பொறுப்பு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் அவர்கள் அனைத்து கல்லூர
B.Ed செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு !
- Get link
- X
- Other Apps
B.Ed செமஸ்டர் தேர்வு தேதி 2021 – வெளியீடு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) ஆனது B.Ed செமஸ்டர் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். TNTEU B.Ed செமஸ்டர் தேர்வு : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU) ஆனது அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகளுக்கு ஒரு முக்கிய சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நடைபெற இருந்த B.Ed செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் பயிலும் மாணவர்கள் முதல் அரியர் மாணவர்கள் வரை இந்த தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கு வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி முதல் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளை எழுத உள்ள மாணவர்கள் கல்லூரியின் அறிவுறுத்தல்களை பின்பற்றி அதற்கான தேர்வு கட்டணத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
TN 12th computer science study plan day 1 question ( 2020-2021)
- Get link
- X
- Other Apps